ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கொரோனா தாக்கம் ஆரம்பமான சில மாதங்களில் நடிகர் பஹத் பாசில் மட்டும் இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் ஒன்றிணைந்து மொபைல் போனிலேயே முழுக்க முழுக்க 'சீ யூ சூன்' என்கிற படத்தை தயாரித்து, நடித்து அதை ஓடிடி தளத்தில் வெளியிட்டு நல்ல வசூலும் பார்த்துவிட்டார்.
அதையடுத்து கொரோனா தாக்கம் நீங்கியிராத நிலையில் கடந்த செப்டம்பர் மாதமே மீண்டும் 'இருள்' என்கிற படத்தின் படப்பிடிப்பையும் கேரளாவில் வாகாமன் பகுதியில் துவங்கியவர், இதோ இன்று அந்தப்படத்தை ரிலீஸும் செய்துவிட்டார்.. வழக்கம்போல இதுவும் ஒடிடி (நெட்பிளிக்ஸ்) தளத்தில் தான் வெளியாகியுள்ளது.
இதில் இன்னொரு ஆச்சர்யமாக மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற ஹிட் படம் மூலமாக சரிந்துகிடந்த பஹத் பாசிலின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய இயக்குனர் திலீஷ் போத்தனுடன் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள 'ஜோஜி' படத்தையும் முடித்து இன்று அதன் ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தபடம் இன்னும் நான்கு நாட்கள் கழித்து (ஏப்-7) ரிலீசாகிறது. இதையும் ஒடிடி (அமேசான் பிரைம்) தளத்திலேயே ரிலீஸ் செய்கிறார்கள். தற்போது கேரளாவில் மலையாள படங்கள் தியேட்டர்களிலேயே வெளியாகி வரும் சூழலில், பஹத் பாசிலுக்கு மட்டும் தியேட்டர் பக்கமே வர விருப்பம் இல்லை போல தெரிகிறது.




