ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

யு டியூப் சாதனையில் மற்ற எந்த ஹீரோயின்களும் செய்யாத ஒரு சாதனையை நடிகை சாய் பல்லவி செய்திருக்கிறார். பொதுவாக யூ டியூப் தளத்தில் டாப் ஹீரோக்களின் பாடல்களுக்குத்தான் மில்லியன் கணக்கில் பார்வைகள் கிடைக்கும்.
ஆனால், சாய் பல்லவியின் மூன்று பாடல்கள் 100 மில்லியனைக் கடந்து சாதனை புரிந்திருக்கின்றன. அதில் தமிழ்ப் பாடலான 'ரௌடி பேபி' பாடல் 1100 மில்லியனைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றது. தெலுங்குப் பாடலான 295 மில்லியனைக் கடந்துள்ளது.
தற்போது 'லவ் ஸ்டோரி' படத்தில் இடம் பெற்றுள்ள 'சாரங்கதரியா' பாடல் 100 மில்லியனைக் கடந்துள்ளது. ஒரு லிரிக் வீடியோ பாடலே இந்த அளவிற்கு பார்வைகளைப் பெற்றுள்ளதென்றால் முழு வீடியோவும் வெளிவந்தால் அதுவும் மேலும் பல சாதனைகளைப் படைக்கலாம்.
இந்த ஒரு பாடலுக்கான வரவேற்பை 'லவ் ஸ்டோரி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாம். ஏப்ரல் 16ம் தேதியன்று இப்படம் வெளியாக உள்ளது.




