சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தற்போது கொரட்டல்ல சிவா இயக்கி வரும் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ராம்சரண், காஜல் அகர்வால், ராஷ்மிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ள சிரஞ்சீவி, தனது அறக்கட்டளை மற்றும் ரத்த, -கண் வங்கி மூலம் சமூக சேவைகள் செய்து வருகிறார். இந்நிலையில், ஆந்திரா கடப்பா மாவட்டத்திலுள்ள கதிரி என்ற பகுதியைச் சேர்ந்த பி.சுரேஷ் என்ற தனது மூத்த ரசிகர் ஒருவர் உடல்நலம் பாரதிக்கப்பட்டுள்ளார் என்ற இந்த செய்தியை அறிந்த சிரஞ்சீவி உடனடியாக அவருக்கு ரூ. 1 லட்சம் மருத்துவ உதவி வழங்கியிருக்கிறார்.




