பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பிரைஸ்ட்' என்கிற படம் படப்பிடிப்பு முடிந்து வரும் மார்ச்சில் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் மம்முட்டி நடித்து, கடந்த வருடமே 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த '1' என்கிற படத்தின் மீதி படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கேரள முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மம்முட்டி.. இந்தப்படத்தின் சில முக்கிய காட்சிகளை திருவனந்தபுரத்திலுள்ள பழைய சட்டசபை வளாகத்திலேயே விசேஷ அனுமதி வாங்கி படமாக்கி உள்ளனர்.
இந்தப்படத்தில் கடக்கல் சந்திரன் என்கிற பெயரில் முதல்வராக நடிக்கிறார் மம்முட்டி. ஒரு நேர்மையான, திறமையான மக்களுக்கான முதல்வர் எப்படி இருக்கவேண்டும் என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளதாம். அதனால் இந்தப்படத்தை கேரளாவில் வரும் ஏப்ரலில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் சந்தோஷ் விஸ்வநாத். அந்தவகையில் வரும் தேர்தலில் மம்முட்டியின் '1' படம் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் படக்குழுவினர்.




