சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் புதிய படங்கள் வெளியாகும் போது அவற்றிற்கு சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து அரசாணை பிறப்பிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
பவன் கல்யாண் நடித்து கடந்த வாரம் வெளியான 'ஓஜி' படத்திற்கு அப்படியான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தெலுங்கானா அரசு வெளியிட்ட ஆணையை எதிர்த்து ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி வழக்கை அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைத்தார்.
இதனிடையே, டிக்கெட் கட்டண உயர்வுக்காக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. அதனால், பழைய கட்டணத்தில் ரசிகர்கள் இனி அப்படத்தைப் பார்க்க முடியும். இன்று முதல் அது அமலுக்கு வருகிறது.
எதிர்வரும் காலங்களில் புதிய படங்களுக்கு டிக்கெட் கட்டண உயர்வு அளிப்பதை தெலங்கானா அரசு கைவிடும் எனத் தெரிகிறது.