பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
மலையாளத்தில் கடந்த 2021ம் வருடம் சுருளி என்கிற படம் வெளியானது. வித்தியாசமான கதை மற்றும் கதைக்களங்களில் படம் எடுக்கும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இதை இயக்கியிருந்தார். ஜோசப் மற்றும் பணி படங்கள் புகழ் நடிகரும், தமிழில் ஜகமே தந்திரம், ரெட்ரோ, சமீபத்தில் வெளியான தக்லைப் உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இதில் கொஞ்ச நேரமே வந்து செல்லும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் நேரடியாக திரைப்பட விழாக்களில் வெளியாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு பேசப்பட்ட சம்பளத் தொகை கொடுக்கப்படாமல் பாக்கி இருக்கிறது என்று ஜோஜூ ஜார்ஜ் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அது மட்டுமல்ல இந்த படம் விருது விழாக்களுக்கு மட்டுமே திரையிடப்பட இருக்கிறது என்று கூறி படத்தில் இடம்பெற்ற கொச்சையான வசனங்களை பேசி நடிக்கச் சொன்னார்கள். ஆனால் திடீரென தியேட்டரில் வெளியிடுவதாக கூறி அதிர்ச்சி அளித்தார்கள் என்றும் கூறியிருந்தார் ஜோஜூ ஜார்ஜ். இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, ஜோஜூ ஜார்ஜூக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “வெறும் மூன்று நாட்கள் மட்டுமே சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஜோஜூ சார்ஜுக்கு 5.9 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு விட்டது. அது மட்டுமல்ல அவர் சொல்வது போல இந்த படம் இப்போது வரை தியேட்டர்களில் வெளியாகவில்லை. திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் திரையரங்குகளில் இதை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பிரச்சனையை தேவையில்லாமல் இன்னும் வளர்க்க வேண்டாம் என நினைத்தாரோ என்னவோ தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து தனது பதிவை நீக்கி உள்ளார் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.