மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கடந்த பல வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் படங்கள், சமீபகாலமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன. கடந்த ஏப்ரலில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'தொடரும்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மோகன்லால் கடந்த 2009ல் நடித்த 'சோட்டா மும்பை' திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அந்தப் படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே, மோகன்லாலின் பழைய படங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மோகன்லால் தனது ரசிகர்களுக்காக ஒரு காரியம் செய்துள்ளார். கடந்த 2013ல் சித்திக் இயக்கத்தில் தான் நடித்த 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்' என்கிற படத்தை தற்போது தனது ஆசிர்வாத் சினிமாஸ் யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் மோகன்லால். ரசிகர்கள் இதை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பார்த்து ரசிக்கலாம். இந்த படத்தில் மோகன்லாலுடன் பிரியாமணி, பத்மப்ரியா, மம்தா மோகன்தாஸ் மற்றும் மித்ரா குரியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.