தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தாங்கள் ஆராதிக்கும் சினிமா ஹீரோக்கள் மீது சில ரசிகர்கள் தீவிர அபிமானம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதில் சில பேர் தங்களது அபிமான ஹீரோக்களை போன்று தோற்றம் கொண்டவர்களாக இருந்தால் சினிமாக்களில் அவர்கள் அணிவது போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு சோசியல் மீடியாக்களில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் சமீப காலமாக குறிப்பாக புஷ்பா 2 திரைப்படம் வெளியான பிறகு அல்லு அர்ஜுனனின் செல்வாக்கு ஹிந்தி பேசும் மாநிலங்களிலும் பெரிய அளவில் பரவியுள்ளது.
அந்த வகையில் புதுடில்லியைச் சேர்ந்த நிஷாந்த் குமார் என்பவர் தோற்றத்தில் கிட்டத்தட்ட அல்லு அர்ஜுன் போலவே காட்சியளிக்கிறார். குறிப்பாக புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுனின் தோற்றம் மற்றும் ஆடைகளை அணிந்து கொண்டு ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு சோசியல் மீடியாவில் ரொம்பவே பிரபலமானார்.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் போல தோற்றத்தில் இருக்கிறார் என்பதற்காகவே அவருக்கு விளம்பர படம் ஒன்றில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு 12 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனையும் நேரில் சந்தித்துள்ள நிஷாந்த் குமார், அல்லு அர்ஜுன் தான் என்னுடைய தெய்வம் என்கிற ரேஞ்சில் புகழ்ந்து வருகிறார்.