‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
மலையாள திரையுலகில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி காமெடி நடிகராக நடித்து வந்தவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த வீர தீர சூரன் படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார். ஆனால் சில வருடங்களாக இவர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். குறிப்பாக டிரைவிங் லைசென்ஸ், ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், விக்ருதி, தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம்.
இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் இவர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் கூட மலையாள ரசிகர்கள் இவரது விலா நோக சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகளை பார்க்க முடியாத ஏக்கத்திலும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்தநிலையில் சில வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது படக்கலம் என்கிற படத்தின் மூலம் மீண்டும் நகைச்சுவை நடிப்பிற்கு திரும்பியுள்ளார் சுராஜ். இந்த படம் வெளியாகி உள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடுவது குறித்து ஏற்படும் பிரச்சனைகளும் ஈகோ மோதலும் தான் இந்த படத்தின் கதை. இன்னொரு ஆசிரியராக பிரேமம் புகழ் ஷராபுதீன் நடித்துள்ளார். பிரேமம் படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சுராஜ் வெஞ்சரமூடு இனி அவ்வப்போது காமெடி படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.