வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்! | சூர்யா 46வது படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா? | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - வெள்ளிவிழா ஆண்டில் ரீரிலீஸ் அறிவிப்பு | பிளாஷ்பேக்: இயக்குநர் பி ஆர் பந்துலுவின் 'டூப்'பாக சாண்டோ சின்னப்ப தேவர் நடித்த “திலோத்தமா” | மோகன்லால் தான் எனக்கு எல்லாமே ; 'தொடரும்' பட வில்லன் நெகிழ்ச்சி |
சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர். உலகெங்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பொதுமக்களில் இருந்து பிரபலங்கள் வரை பலரும் தங்களது கண்டனங்களை பாகிஸ்தானுக்கு எதிராக வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சில பிரபலங்கள் இந்த விஷயத்தில் கருத்து கூறுகிறேன் என தேவையில்லாத சில பேச்சுக்களை பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்த போது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.. அப்போது பஹல்காம் தாக்குதல் குறித்து அவர் பேசும்போது, “நிச்சயமாக நமது அரசு அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும். இப்படிப்பட்ட தாக்குதல் மூலம் அவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள் ? காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது தான். காஷ்மீரை சேர்ந்தவர்கள் நம்முடையவர்கள்” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
இதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. இதற்கு அடுத்ததாக, “இந்தியா பாகிஸ்தான் மீது போர் கூட தொடுக்க தேவையில்லை.. ஏனென்றால் பாகிஸ்தானியர்கள் அவர்களாகவே அவர்களது அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் அவர்களே அவர்களுக்குள் அடித்து கொள்வார்கள். 500 வருடங்களுக்கு முன்பு ஆதிவாசிகள் என்ன செய்தார்களோ அதுபோல பொது அறிவு இல்லாமல் தான் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறினார்.
பாகிஸ்தானியர்களின் உள்நாட்டு சண்டையை பழங்குடியினருடன் ஒப்பிட்டு விஜய் தேவரகொண்டா பேசிய வார்த்தைகள் சர்ச்சையை கிளப்பியதுடன் அவருக்கு எதிராகவும் திரும்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பழங்குடியின அமைப்புகள் சில கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் விஜய் தேவரகொண்டா இப்படி பேசியதற்கு வெளிப்படையாக பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல பழங்குடியினர் அமைப்புகள் சங்கம் தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமல்ல ஐதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லால் சவுஹான் என்பவர் எஸ்.ஆர் நகர் காவல் நிலையத்தில் விஜய் தேவரகொண்டா மீது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரும் அளித்துள்ளார்.