யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்! | சூர்யா 46வது படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா? | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - வெள்ளிவிழா ஆண்டில் ரீரிலீஸ் அறிவிப்பு | பிளாஷ்பேக்: இயக்குநர் பி ஆர் பந்துலுவின் 'டூப்'பாக சாண்டோ சின்னப்ப தேவர் நடித்த “திலோத்தமா” |
கைதி படம் மூலம் மிரட்டலான வில்லத்தனம் மற்றும் வித்தியாசமான குரல் உச்சரிப்பு ஆகியவற்றால் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படங்களில் முக்கிய இடம் பிடித்து வரும் இவர் கதாநாயகனாகவும் மாறி அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் ரசவாதி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அர்ஜுன் தாஸுக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் முதன்முறையாக மெயின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததுடன் இரட்டை வேடங்களில் நடித்தும் அசத்தியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் பஹத் பாசில் மலையாளத்தில் நடிக்கும் டார்பிட்டோ என்கிற படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறார் அர்ஜுன் தாஸ். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடரும் படத்தை இயக்கிய இயக்குனர் தருண் மூர்த்தி தான் இந்த புதிய படத்தை இயக்குகிறார். இவர்கள் இருவர் தவிர பிரேமலு புகழ் நடிகர் நஸ்லேனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அகமது கபீர் என்பவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிப்பதன் மூலம் மலையாளத்தில் நுழைந்துள்ள அர்ஜுன் தாஸ், தற்போது பஹத் பாசிலுடன் நடிக்கும் இந்த படத்தின் மூலம் மலையாளத் திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.