ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
மலையாள சினிமாவில் குணசித்ர நடிகராக அறியப்பட்டவர் விஷ்ணு பிரசாத். அண்ணன், தம்பி, மாதிரியான கேரக்டர்களில் நடித்து வந்தார். மாம்பழ காலம், ரன்வே, பென் ஜான்சன், பதாகா, மராத்தானாடு உள்ளிட்ட படங்களிலும் மற்றும் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில் 'காசி' என்ற படத்தில் நடித்தார்.
48 வயதான விஷ்ணு பிரசாத் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவரது மகள் தனது கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தார். மேலும் குடும்பத்தினர் மருத்துவ செலவிற்காக ரூ.30 லட்சம் பணத்தையும் ரெடி பண்ணி வந்தனர்.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு முன்பே விஷ்ணு பிரசாத் சிகிச்சை பலனின்றி திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். பணம் புரட்ட தாமதம் ஆனதால் அவர் இறந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.