25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்! | சூர்யா 46வது படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா? | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - வெள்ளிவிழா ஆண்டில் ரீரிலீஸ் அறிவிப்பு | பிளாஷ்பேக்: இயக்குநர் பி ஆர் பந்துலுவின் 'டூப்'பாக சாண்டோ சின்னப்ப தேவர் நடித்த “திலோத்தமா” | மோகன்லால் தான் எனக்கு எல்லாமே ; 'தொடரும்' பட வில்லன் நெகிழ்ச்சி | ஜனவரியில் வசூலை அள்ளிய படம்.. மே தினத்தில் போனஸ் அனுப்பி குஷிப்படுத்திய தயாரிப்பாளர் |
மலையாளத்தில் கடந்த வாரம் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் தொடரும். இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று தற்போது நூறு கோடி வசூலை நெருங்கி உள்ளது. இத்தனைக்கும் ஆபரேஷன் ஜாவா, சவுதி வெள்ளக்கா என இரண்டு சின்ன பட்ஜெட் படங்களை இயக்கிய இயக்குனர் தருண் மூர்த்திக்கு அந்த படங்களை அவர் நேர்த்தியாக இயக்கி வெற்றி படங்களாக கொடுத்ததன் காரணமாகத்தான் மோகன்லாலை வைத்து மூன்றாவது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தையும் வெற்றி படமாக கொடுத்ததால் தற்போது முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார் தருண் மூர்த்தி.
இதனைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக அடுத்ததாக பஹத் பாசில் நடிப்பில் புதிய படத்தை இவர் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு டார்பிட்டோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டார்பிட்டோ என்றால் தொட்டால் மின் அதிர்ச்சி உண்டாக்கும் ஒரு வகை மீன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தயாரிக்கும் ஆசிக் உஸ்மான் நிறுவனம் தான் தற்போது பஹத் பாசில் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஓடும் குதிரை சாடும் குதிரை என்கிற படத்தையும் தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.