கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
தெலுங்கில் இந்த வாரம் நாளை மார்ச் 28ம் தேதி வெளியாகும் விதமாக தயாராகி உள்ள படம் ராபின் ஹூட். நிதின் ஹீரோவாக நடிக்க, ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்துள்ளார். வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால் பிரபல ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் நடிப்புத் துறையில் நுழைந்துள்ள அவர் முதன்முறையாக தெலுங்கு திரை உலகின் மூலம் தனது நடிப்பு பயணத்தை துவங்கியுள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் டேவிட் வார்னர்.
இதற்கு முன்னதாக அவர் புட்டபொம்மா பாடலுக்கு அல்லு அர்ஜுன் போல நடனமாடி வீடியோ வெளியிட்டது, புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் போல சேலை அணிந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டது என தெலுங்கு ரசிகர்களிடம் மிக நெருக்கமாகிவிட்டார். இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கூட அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 மேனரிச நடன அசைவை செய்து காண்பித்து ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றார்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கு சீனியர் நடிகரான ராஜேந்திர பிரசாத், டேவிட் வார்னர் பற்றி மேடையில் பேசும்போது நகைச்சுவை என்கிற பெயரில் அவரது இந்த செயல்களை எல்லாமே கிண்டல் அடிக்கும் தொனியிலேயே பேசினார். ஆனால் இவரது பேச்சுக்கு ரசிகர்களிடம் இருந்து மிகப்பெரிய எதிர்ப்பும் கண்டனமும் வெளிப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தனியாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ள ராஜேந்திர பிரசாத் டேவிட் வார்னர் பற்றி தான் மரியாதை குறைவாக, அலட்சியமாக பேசவில்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும்போது, “நான் டேவிட் வார்னர் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை.. நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு கூட நாங்கள் தனி அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது சகஜமாக ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம். நான் டேவிட் வார்னரிடம் நீங்கள் ஒரு நடிகர் என்பதை நிரூபிக்க வேண்டும் என கூறினேன். அவரும் பதிலுக்கு அதே போல என்னிடம் நீங்களும் ஒரு கிரிக்கெட் வீரராக உங்களை நிரூபிக்க வேண்டும் என ஜாலியாக கூறினார். அதனால் மேடையில் அவர் பற்றி நான் ஜாலியாக பேசிய விஷயங்கள் ரசிகர்களிடம் எதிர்மறை தோற்றத்தை ஏற்படுத்தி விட்டன. இதனால் டேவிட் வார்னர் மட்டுமல்லாது அவரது ரசிகர்களுக்கும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக எனது வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.