மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி |
மலையாள திரை உலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபலமான பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வந்தவர் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன். 78 வயதான இவர் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மற்ற மொழி படங்கள் மலையாளத்தில் வெளியாகும் போதும் அதன் பாடல்களை இவர் எழுதியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் ராஜமவுலியின் ஈகா படத்திலிருந்து அடுத்ததாக பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை மட்டுமல்ல அதன் மலையாள பதிப்புக்கு வசனங்களையும் கோபாலகிருஷ்ணன் தான் எழுதியிருந்தார்.
இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்த நிலையில் இயக்குனர் ராஜமவுலியும் தனது எக்ஸ் பக்கத்தின் மூலமாக தனது இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மலையாள சினிமாவின் ஜாம்பவான் எழுத்தாளரான மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் மறைந்து விட்டார் என்கிற செய்தியை கேட்டதும் ரொம்பவே வருத்தமடைந்தேன். அவரது காலத்தால் அழியாத பாடல்கள், கவிதை மற்றும் வசனங்கள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஈகா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் மலையாள பதிப்புகளுக்கு அவருடன் இணைந்து பணியாற்றியது பெருமையான விஷயம்” என்று கூறியுள்ளார்.