லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
தெலுங்கில் தற்போது விஷ்ணு மஞ்சு இயக்கத்தில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வருகிறது 'கண்ணப்பா'. இதில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அதே சமயம் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் மோகன்லால், அக்ஷய் குமார் மற்றும் பிரபாஸ் ஆகியோர் நடித்துள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக இருக்கிறது. இந்த படத்தின் கதாசிரியராக தெலுங்குத் திரை உலகில் பிரபலமான தோட்டா பிரசாத் என்பவர் பணியாற்றியுள்ளார்.
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பிரபாஸ் நடித்த படத்தில் கதாசிரியராக பணியாற்றிய இவர் மீண்டும் தற்போது பிரபாஸ் உடன் இணைந்து பணியாற்றியது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல பிரபாஸ் தனக்கு செய்த மிகப்பெரிய உதவி ஒன்றையும் அவர் தற்போது வெளியில் தெரிவித்துள்ளார்.
“2010ம் வருடம் நான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் மருத்துவ செலவுக்காக மிகப்பெரிய தொகை தேவைப்பட்டது. அந்த சமயத்தில் வேறு யாரிடமிருந்தும் உதவி கிடைக்காத நிலையில் பிரபாஸிடம் உதவி கேட்டு செய்தி அனுப்பினேன். அவர் எனது மருத்துவ செலவிற்கு தேவையான பணத்தையும் மற்ற உதவிகளையும் உடனே அனுப்பி வைத்தார். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அன்றைய தினம் தான் அவரது தந்தை மரணம் அடைந்திருந்தார்.
தனது தந்தையின் இறுதி காரியங்களை கவனித்து வந்த அந்த சோக நிகழ்விலும் கூட என்னை மறக்காமல் என் மருத்துவ செலவுக்கான தொகையை கொடுத்து அனுப்பியதுடன் அது எனக்கு கிடைத்து விட்டதா என்று கேட்டும் உறுதிப்படுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதருடன் உடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது எனது அதிர்ஷ்டம் தான்” என்றும் கூறியுள்ளார் தோட்டா பிரசாத்.