நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் திலீப். மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் கமர்சியல் ஆக்ஷன் ரூட்டில் பயணிக்க, நடிகர் திலீப் குடும்ப ரசிகர்களை குறி வைத்து காமெடி, சென்டிமெண்ட் என தனக்கான ஒரு தனி பாதையை போட்டுக் கொண்டவர். மினிமம் கியாரண்டி ஹீரோ என்கிற பெயரை பெற்ற இவர் சமீப வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வருகிறார். அது மட்டுமல்ல, கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறைவாசமும் அனுபவித்து விட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வழக்கும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
அந்த வழக்கில் அவர் சிக்கியிருந்த சமயத்தில் தான் அவரது நடிப்பில் உருவான ராம்லீலா திரைப்படம் வெளியாகி நூறு கோடி வசூலித்தது. இதனால் திலீப் மீது ரசிகர்கள் எந்த அதிருப்தியிலும் இல்லை என்பது அப்போது நிரூபதமானது. ஆனாலும் சமீபகாலமாக அவர் கதை தேர்வில் கோட்டை விடுவதால் தான் சரிவை சந்தித்து வருகிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதே சமயம் அவரது படங்கள் வெளியாகும் போது அவர் குறித்த பர்சனல் விமர்சனங்களும் சோசியல் மீடியாவில் அவர் மீது வீசப்படுகிறது. சமீபத்தில் கூட சபரிமலையில் அவருக்கென விதிமுறைகளை தளர்த்தி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசிய நடிகர் திலீப், “என் மீது யார் வேண்டுமானாலும் கல்லெறிந்து கொள்ளட்டும்.. என் புகழுக்கு களங்கம் விளைவித்தாலும் விளைவிக்கட்டும். அது பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. எனக்கு இன்னும் பேசுவதற்கான வாய்ப்பு வரவில்லை.. கடவுள் அப்படி ஒரு வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுப்பார் என நிச்சியமாக நம்புகிறேன். எனக்கு எப்போதுமே என் பின்னணியில் இருந்து உற்சாகமும் பாதுகாப்பும் பலமும் கொடுப்பவர்கள் எனது ரசிகர்கள் தான்.. அவர்களால் தான் இன்று நான் இங்கே நிற்கிறேன். நிச்சயம் அவர்கள் விரும்பும் விதமான படங்களை தொடர்ந்து கொடுப்பேன்” என்று கூறியுள்ளார்.