அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகைகள் பலரும் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக சுமத்திய போது, அறிக்கை வெளியான சில நாட்களுக்கு நடிகர் சங்கம் எந்த கருத்தும் சொல்லாமல் அமைதி காத்தது.
நடிகர் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகளே இதுபோன்று பாலியல் புகார்களுக்கு ஆளானது அதிர்ச்சி அளித்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவரான மோகன்லால் தனது தலைமையிலான சங்க நிர்வாகிகள் அனைவருடன் சேர்ந்து கூண்டோடு ராஜினாமா செய்தார். புதிய நிர்வாக குழு மீண்டும் தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்படும் என்றும், தான் மீண்டும் சங்கத் தலைமைக்கு போட்டியிடப் போவதில்லை என்றும் கூட அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகரும், அமைச்சருமான சுரேஷ் கோபி இப்படி கூண்டோடு விலகிய நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து ஒரு கெட் டுகெதர் பார்ட்டி நடத்த இருக்கிறார். வரும் ஜனவரி-5ஆம் தேதி கொச்சியில் உள்ள இந்தூர் ஸ்டேடியத்தில் இது ஒரு மெகா விழாவாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் மோகன்லாலும் மம்முட்டியும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மலையாள திரை உலகில் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் அரசியல் ரீதியாகவும் சங்கத்திற்கு ஆதரவு இருக்கும் என்று தெரியப்படுத்தும் விதமாக சுரேஷ் கோபி இந்த கெட் டு கெதர் நிகழ்வை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.