ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் சிறையில் அவருக்கு முறைகேடாக பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி வெளியானதை அடுத்து கடந்த மாதம் பெல்லாரியில் உள்ள சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து அவரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமினுக்காக விண்ணப்பித்துள்ளார் தர்ஷன். இந்த நிலையில் சிறையில் தர்ஷன் கடுமையான முதுகு வலியால் அவதிப்படுவதாகவும் இன்னொருத்தர் உதவியுடன் தான் நிற்கவும் நடக்கவும் முடிகிறது என்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருவேளை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டால், தன்னை மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வசதியாக பெங்களூருக்கு மாற்ற வேண்டும் என தர்ஷன் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.