லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜூனா. தொடர்ந்து கதாநாயகனாக, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது தனுஷின் குபேரா, ரஜினியின் கூலி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் முடிந்துவிட்டன. குபேரா ஜுன் 20ல் தமிழ், தெலுங்கில் ரிலீஸாகிறது. கூலி படம் ஆக., 14ல் ரிலீஸாகிறது.
இதனிடையே கூலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியின் உடன் 'ஜெயிலர் 2' படத்தில் சிறப்பு ரோலில் நாகார்ஜுனாவை நடிக்க வைக்க இயக்குனர் நெல்சன் பேசி வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.