படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தமிழ் சினிமாவை போலவே மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் தங்களுக்கென சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்குவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல நடிகர்கள் தங்களது சொந்த தயாரிப்பில் நடித்தாலும் பெரும்பாலான ஹீரோக்கள் தங்களது நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்துவதற்காகவே இப்படி பட தயாரிப்பில் ஈடுபடுவது தான் அதிகம். அந்த வகையில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட நடிகர் டொவினோ தாமஸ் தற்போது படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார். முதன்முறையாக அவர் தயாரிக்கும் படத்திற்கு மரண மாஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிவபிரசாத் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இது ஒரு மாஸ் படம் அல்ல என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார் டொவினோ தாமஸ். இவர் நடித்த மின்னல் மின்னல் முரளி என்கிற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கிய இயக்குனர் பஷில் ஜோசப் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரித்விராஜுடன் இவர் இணைந்து நடித்த குருவாயூர் அம்பல நடையில் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக பஷில் ஜோசப் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள நுனக்குழி என்கிற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் தான் நஸ்ரியாவுடன் இவர் இணைந்து நடித்து வரும் சூட்சும தர்ஷினி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் தற்போது மரண மாஸ் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அனேகமாக இன்னும் சில வருடங்களுக்கு டைரக்ஷன் பக்கம் பஷில் ஜோசப் திரும்பிப் பார்க்க மாட்டார் என்று சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.