ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
மலையாள திரையுலகில் ராணுவ பின்னணி கொண்ட திரைப்படங்களாக எடுத்து வரவேற்பு பெற்றவர் முன்னாள் ராணுவ அதிகாரியும் இயக்குனருமான மேஜர் ரவி. குறிப்பாக மோகன்லால் நடிப்பில் ‛கீர்த்தி சக்கரா, குருசேத்திரம், காந்தகார் காந்தக்கார்', பிரித்திவிராஜ் நடிப்பில் ‛பிக்கெட்-43' என இவர் இயக்கிய அனைத்து படங்களும் ராணுவ பின்னணி கொண்டவைதான்.
கீர்த்தி சக்கரா படத்தில் இவருடன் முதன்முதலாக கூட்டணி சேர்ந்த மோகன்லால் அடுத்து தொடர்ந்து இவரது நான்கு படங்களில் நடிக்கும் அளவிற்கு நட்பு உருவாகியது. ஆனால் இந்த கீர்த்தி சக்கரா படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடிக்க இருந்தது பிஜூமேனன் தான், பிறகு தான் மோகன்லால் வந்தார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள மேஜர் ரவி, அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்,
கீர்த்தி சக்ரா கதையை எழுதியதும் பிஜூமேனனிடம் தான் அந்த கதையை சொன்னேன். அவருக்கும் ரொம்பவே பிடித்து விட்டது. வெளிநாட்டிலிருந்து ஒரு தயாரிப்பாளரையும் அழைத்து வந்தார். அவரை சந்திப்பதற்காக நானும் பிஜூமேனனும் அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்றோம். அங்கே அந்த தயாரிப்பாளருடன் இன்னும் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் போகும்போதே சீட்டு விளையாடுவதற்கு தயாராக கார்டுகளை அடுக்கி வைத்திருந்தார்கள். பிஜூமேனன் போனதுமே அவர் கையிலும் சீட்டுகளை திணித்து விளையாட உட்கார வைத்து விட்டார்கள். என்னை கதை சொல்ல சொன்னார்கள்.
நான் ஐந்து நிமிடம் கதை சொன்னேன். ஆனால் அவர்கள் கவனம் கதை கேட்பதில் இல்லை. உடனடியாக அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன். அதன் பிறகு பிஜூமேனனிடம் இவர்களுக்கு சினிமா தயாரிக்கும் ஆர்வம் இல்லை என ஓப்பனாகவே சொல்லிவிட்டேன். பிறகு இரண்டு வருடம் கழித்து மோகன்லாலிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. கதை சொன்னதுமே அவருமே ஒப்புக்கொண்டு உடனடியாக தேதிகளை ஒதுக்கி கொடுத்தார். அப்படித்தான் அந்த படம் உருவானது” என்று கூறியுள்ளார்.