நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? |
நடிகர் மோகன்லால் தற்போதும் கைவசம் நான்கு படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் முதன்முறையாக இயக்குனராக மாறி தான் இயக்கியுள்ள பரோஸ் படத்தை இயக்கி முடித்து வரும் செப்டம்பரில் அதை ரிலீஸ் செய்யும் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வரலாற்று படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்து தான் சேர்த்த சொத்துக்களை பதுக்கி வைத்து மறைந்த நிலையில் அதை பாதுகாக்கும் பாதுகாவலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடித்துள்ளார்.
தற்போது பிரித்விராஜ் இயக்கத்தில் தான் நடித்து வரும் லூசிபர் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதை முடித்துவிட்டு நேரடியாக மும்பை வந்தார் மோகன்லால். அங்கே பரோஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன் இணைந்து மும்பையில் உள்ள முக்கிய புள்ளிகளுக்காக அங்கே உள்ள பிவிஆர் திரையரங்கில் பரோஸ் படத்தின் டிரைலரை திரையிட்டு காட்டியுள்ளார் மோகன்லால். இது படத்தின் ஓடிடி மற்றும் ஹிந்தி உரிமை தொடர்பான வியாபாரத்திற்காக என்று சொல்லப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக வரும் செப்டம்பரில் இந்த படம் வெளியாக இருக்கிறது.