இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இயற்கையின் சீற்றத்திற்கு அடிக்கடி ஆளாவதில் நம் பக்கத்தில் உள்ள கேரள மாநிலமும் ஒன்று. கடந்த 2018ல் மிகப் பெரிய இயற்கை பேரழிவை சந்தித்து அதில் இருந்து மீண்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல பேரின் நிலை என்னவென்று தெரியாமல் தற்போது தேடுதல் பணிகளும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிகளும் துரித கதியில் நடந்து வருகின்றன. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற அளவு நிவாரண நிதியை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மலையாளம் நடிகர் டொவினோ தாமஸ் தனது பங்களிப்பாக ரூபாய் 25 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அது மட்டுமல்ல உணவு வழங்குவதற்கு என கிட்டத்தட்ட 1000 எவர்சில்வர் தட்டுக்கள் மற்றும் சமையல் உபகரணங்கள் சிலவற்றையும் அவர் வழங்கியுள்ளார். இதேபோன்று கடந்த 2018ல் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் போதும் அவர் தானே களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.