நகைச்சுவை நாயகனா? கதாநாயகனா? மக்களே கூறட்டும்; நடிகர் சூரி | ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் |
சமீபத்தில் கேரளாவில் உள்ள வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து மூன்று கிராமங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். 350 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திரை நட்சத்திரங்கள் பலரும் கேரளாவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் சீனியர் நடிகைகளான மீனா, சுஹாசினி, குஷ்பு, லிசி பிரியதர்ஷன் ஆகியோர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்கள். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.