அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
ஆந்திர மாநிலத்தில் நடந்த தேர்தலில் சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாண், ஆகியோர் இணைந்து அரசை நடத்தி வருகிறார்கள். சந்திர பாபு நாயுடு முதல்வராகவும், பவன் கல்யாண் துணை முதல்வராகவும் உள்ளார்கள். இந்நிலையில் ஆந்திர அரசில் உள்ள சில நியமனப் பதவிகளுக்கு யார், யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்து முடிந்துவிட்டதாம்.
பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினருக்கு அதில் 20 சதவீதப் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். ஆந்திரா திரைப்பட மற்றும் டிவி வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக பவன் கல்யாணின் அண்ணனும், சிரஞ்சீவியின் தம்பியுமான நாக பாபு நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கிறார் நாக பாபு. திரைப்படத் துறையினருடன் நாகபாபுவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் தெலுங்குத் திரையுலகத்தை ஆந்திராவுக்கும் கொண்டு வர முயற்சிப்பார் என்பதால் அந்தப் பதவியை வழங்கலாம் என பவன் ஆலோசனை சொன்னாராம்.
முதலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன் பதவியைப் பெற நாகபாபு விருப்பமாக உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. நாகபாபுவுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் பவனின் முதல் விருப்பமாக இருந்ததாம். ஆனால், அதற்கான காலம் இன்னும் அதிகமாக உள்ளது. அதுவரையில் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருக்கட்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.