நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுளக்ஸ், தெலுங்கில் வெளியான தசரா உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. அவ்வப்போது பரபரப்பான செய்திகளில் அடிபடும் சாக்கோ சில வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் போதைப் பொருள் பயன்படுத்தினார் என்று கைது செய்யப்பட்டு பின் விடுதலை ஆனவர். சமீப வருடங்களாக பொறுப்புணர்வுடன் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வருடம் அவருக்கும் அவரது காதலியான மாடல் அழகி தனுஜாவுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தற்போது தான் சிங்கிளாக கூறியிருந்தார் ஷைன் டாம் சாக்கோ. இவர்களது பிரேக்கப் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இவரது காதலி தனுஜா சோசியல் மீடியா லைவ் வீடியோவில் இது குறித்து உருக்கமாக பேசி உள்ளார். தங்களது பிரேக்கப் குறித்து அவர் கூறும்போது, “மற்றவர்களை விட சாக்கோவை நான் ரொம்பவே நேசித்தேன். ஆனால் யாரையும் அதிகம் நம்பக் கூடாது என்பதை இந்த நாட்களில் நான் புரிந்து கொண்டேன். அவருக்காக என்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து வந்தேன். ஆனால் என்னுடைய குடும்ப போட்டோவை அவர் உடைத்தெறிந்தார். அவர் நல்ல மனிதர் தான். இப்போதும் அவரைப் பற்றி நான் தவறாக கூறவில்லை. அதேசமயம் அவரை மட்டுமல்ல நம்முடன் நெருக்கமாக இருப்பவர்களை கூட நம்புவதற்கு மனம் தயங்குகிறது. என்னுடன் நெருக்கமான நட்பில் இருந்த பலர் கூட உங்கள் இரண்டு பேருக்கும் நீண்ட நாளைக்கு செட்டாகாது என இரண்டு வருடத்திற்கு முன்பே எங்களுக்கு தெரியும் என இப்போது கூறுவது இன்னும் என்னை காயப்படுத்துகிறது” என்று வேதனையுடன் பேசியுள்ளார்.