அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
சமீபகாலமாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் தியேட்டர் வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் சாட்டிலைட் மற்றும் ஓடிடி வியாபாரங்களை நம்பியே முதலீடு செய்கின்றன. சில படங்களுக்கு வெளியாவதற்கு முன்பே ஓடிடி வியாபாரம் முடிந்து விடுகிறது. ஆனால் பல படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை சந்திக்கும்போது ஓடிடி வியாபாரத்தில் சிக்கலை சந்திக்கின்றன. தற்போது மலையாள நடிகர் திலீப்பின் படங்கள் இதேபோன்ற சிக்கலில் தான் சிக்கித் தவிக்கின்றன
கடந்த வருடம் திலீப் நடிப்பில் பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனால் படம் வெளியாவதற்கு முன்பு படத்தை வாங்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்த ஓடிடி நிறுவனங்கள் படத்தின் ரிசல்ட்டை பார்த்த பிறகு இப்போது வரை பாராமுகம் காட்டி வருகின்றனவாம். இதையடுத்து திலீப் நீண்ட நாட்களாக நடித்து வரும் பறக்கும் பாப்பன் மற்றும் அவரது 150 வது படம் ஆகியவற்றின் தயாரிப்பிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.