100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப், கமல் மற்றும் பலர் நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' படம் அடுத்த வாரம் ஜுன் 27ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் கட்டணங்களை அதிகமாக உயர்த்திக் கொள்ள தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி அதிகாலை 5.30 மணி சிறப்புக் காட்சிகளுக்கு சிங்கிள் தியேட்டர்களில் 377 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 495 ரூபாயும் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. 3டி கண்ணாடிகளுக்கான கட்டணம் தனி. படம் வெளியாகும் முதல் நாளில் 6 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற காட்சிகளுக்கான கட்டணங்களில் சிங்கிள் தியேட்டர்களுக்கான கட்டணம் அதிகபட்சமாக 265 ரூபாய், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கான கட்டணம் 413 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கிள் தியேட்டர்களுக்கு 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு 100 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில அரசின் டிக்கெட் கட்டணம் பற்றிய அரசு அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அங்கும் டிக்கெட் கட்டணம் இப்படத்திற்காக உயர்த்தப்படலாம்.
'கல்கி 2898 ஏடி' படம் உலகம் முழுவதுமாக சேர்த்து சுமார் 385 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டண உயர்வால் தெலுங்கில் இப்படத்தின் வசூல் அதிகமாக வாய்ப்புள்ளது.