சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மலையாள திரையுலகை பொறுத்தவரை மற்ற மொழிகளை விட இங்கே சினிமா பின்னணி கதையம்சம் கொண்ட படங்கள் அடிக்கடி வெளியாவதுண்டு. அப்படி வெளியாகும் படங்களில் சமீபகாலமாக படத்தில் ஹீரோவாக அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர்களை வைத்து நடப்பு காலத்தில் ஹீரோக்களாக இருப்பவர்களை கிண்டல் பண்ணும் பாணியிலான வசனங்கள் இடம் பெற்று வருகின்றது ஆச்சரியம் அளிக்கிறது.
குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பு வினீத் சீனிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாகவும், சிறிது இடைவேளைக்குப் பிறகு நிவின்பாலி முக்கிய வேடத்திலும் நடித்திருந்த ‛வருஷங்களுக்கு சேஷம்' என்கிற படம் வெளியானது. அதில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுக்கும் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த நிவின்பாலி, “அவன் மகன், இவன் மகன் எல்லாம் சேர்ந்து கொண்டு என்னை வளர விடாமல் செய்கிறார்கள்” என்பது போல வசனம் பேசி இருந்தார்.
அவர் குறிப்பிட்டு இருந்தது மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் பாசிலின் மகன் பஹத் பாசில் என வாரிசு நடிகர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை குறிப்பிடும் விதமாக அமைந்திருந்தது. அதே சமயம் இந்த படத்தை இன்னொரு வாரிசு நடிகரான வினீத் சீனிவாசன் இயக்கியிருந்ததால் இது குறித்து பெரிய சலசலப்பு ஏற்படவில்லை. அந்த வசனங்களை ரசிகர்களும் நகைச்சுவையாகவே ரசித்துவிட்டு கடந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் தற்போது டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‛நடிகர்' என்கிற திரைப்படமும் சினிமா பின்னணியைக் கொண்டே உருவாகியுள்ளது. இந்த படத்திலும் டேவிட் படிக்கல் என்கிற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள டொவினோ தாமஸ், “என்னுடைய இரண்டு படங்கள் பிளாப் ஆனாலும் கூட நான் இன்னும் சூப்பர் ஸ்டார் தான்” என்று ஒரு வசனம் பேசுகிறார். இவர் யாரை சொல்லுகிறார் அல்லது தன்னைத்தானே சொல்கிறாரா என்பது குறித்து சோசியல் மீடியாவில் தற்போது ஒரு சலசலப்பு கிளம்பியுள்ளது.
ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள டொவினோ தாமஸ் இப்படி சொல்லும் அளவிற்கு நான் இன்னும் வளர்ந்து வரவில்லை.. அதேசமயம் யாரையும் குறிப்பிட்டு இந்த வசனம் பேசப்படவில்லை.. படத்தின் கதாபாத்திரத்திற்காக எழுதப்பட்ட வசனம் தான்” என்று கூறியுள்ளார்.