'ஆர்ஆர்ஆர்' டிரைலரை முந்திய 'ஹிட் 3' | பிளாஷ்பேக்: காட்சியை தத்ரூபமாக்க, கழுதைகளை கொண்டுவரச் செய்து, படப்பிடிப்பு நடத்திய 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபர் டி ஆர் சுந்தரம் | இளையராஜா நோட்டீஸ்: இன்று பதில் கிடைக்குமா ? | அஜித்தின் அடுத்த படமும் தெலுங்கு நிறுவனத்திற்கே..?? | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? | இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! |
சமீபகாலமாக வெளியாகும் மலையாள படங்கள் கேரளாவையும் தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெறுகின்றன. நல்ல வசூலையும் ஈட்டுகின்றன. ஒரு பக்கம் இப்படி மலையாள படங்களை பற்றி பிரமிப்புடன் பேசினாலும் இன்னொரு பக்கம் இப்படி சமீப காலமாக வெற்றி பெற்ற படங்களில் கதாநாயகிகள் என்கிற கதாபாத்திரமே இல்லை என்பதும் குறிப்பாக சாதாரண பெண் கதாபாத்திரங்கள் கூட அதிகப்படியாக பயன்படுத்தப்படவில்லை என்பதும் மலையாள திரையுலகில் விவாத பொருளாக மாறி உள்ளது.
குறிப்பாக மஞ்சும்மேல் பாய்ஸ், மம்முட்டியின் பிரம்மயுகம், கண்ணூர் ஸ்குவாட், பஹத் பாசிலின் ஆவேசம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளே இடம்பெறவில்லை. இந்த நிலையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கி வரும் 'பெங்களூர் டேய்ஸ்' புகழ் இயக்குனர் அஞ்சலி மேனன், மலையாள சினிமாவில் பெண்கள் எங்கே போனார்கள் என தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார்.
குறிப்பாக ஆவேசம் படத்தில் இடம்பெறும் கல்லூரி காட்சிகளில் பெண்களை அதிகம் காட்டுவதற்கு வாய்ப்பு இருந்தும் கூட ஒரு மாணவனின் தாயார் என்கிற ஒரே ஒரு பெண் கதாபாத்திரத்தை மட்டும் காட்டி பெண்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்து விட்டார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த படங்களின் இயக்குனர்கள் இது பற்றி கூறும்போது கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை மட்டுமே படத்தில் இடம்பெறச் செய்துள்ளோம் என்று கூறுகின்றனர்.