பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக பிரபலமான முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஜோஷி. மம்முட்டி, மோகன்லால், திலீப் என முன்னணி நடிகர்களை வைத்தே கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் இயக்கியவர். தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ரம்பான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டது என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் விசாரணையில் நேற்று முன்தினம் இரவு ஜோஷி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிலே இருந்த நிலையிலேயே மர்ம நபர் ஒருவன் வீட்டிற்குள் புகுந்துள்ளான். முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகளில் வைர மோதிரங்கள், காதணிகள், தங்க செயின்கள் மற்றும் வளையல்கள் என ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகையை அந்த மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளான். மேலும் வீட்டிற்குள் இருந்த சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளான். இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், உடுப்பியில் ஒருவரை கைது செய்துள்ளனர்.