குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
மலையாள திரையுலகில் இயக்குனர், நடிகர் என வெற்றிகரமாக பேலன்ஸ் செய்து பயணித்து வருபவர் வினீத் சீனிவாசன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லால் மகன் பிரணவ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த 'ஹிருதயம்' என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. இதைத்தொடர்ந்து தற்போது 'வருஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார் வினீத் சீனிவாசன்.
இதிலும் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இது தவிர வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசனும் முக்கிய வேடத்தில் நிவின்பாலியும் நடிக்கின்றனர். வரும் ஏப்-11ம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது. சினிமா பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் 1970 மற்றும் இன்றைய காலகட்டம் என இரண்டு வித காலகட்டங்களில் உருவாகியுள்ளது. இதில் 70களின் காலகட்டத்தில் சென்னையில் கதை நடைபெறுவது போல உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக அந்த காலகட்டத்தில் சென்னை எப்படி இருந்தது, அந்நாளைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது என்பது போன்ற தகவல்களை இயக்குனர் பிரியதர்ஷினிடமிருந்து கேட்டறிந்து அதை இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் வினீத் சீனிவாசன். 70களில் பிரியதர்ஷன் சினிமாவில் வாய்ப்பு தேடுவதற்காக சென்னையில் பல வருடங்கள் தங்கி இருந்தார் என்பதால், அது குறித்து அவரது அனுபவங்கள் இந்த படத்திற்கு பேருதவியாக இருந்தது என்றும் வினீத் சீனிவாசன் கூறியுள்ளார்.