இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
ஹிந்தியை தொடர்ந்து, தென்னிந்தியாவுக்குள் நுழைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே, அதைத் தொடர்ந்து மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிவடைந்துள்ளன. தற்போது ஆறாவது சீசன் துவங்கி 3வது வாரம் போய்க்கொண்டிருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் மோகன்லால் தான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் நேற்று முன்தினம் சக போட்டியாளர்களான அசி ராக்கி என்பவருக்கும் சிஜோ ஜான் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பில் முடிந்தது. சிஜோ ஜான் முகத்தில் அசி ராக்கி வேகமாக குத்துவிட்டதில் அவர் தாடையில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் நிகழ்ச்சியில் மீண்டும் நுழைய முடியாதோ என்கிற தயக்கத்தில் முதலில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளியே செல்ல மறுத்தார். ஆனால் அவர் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என்றும் உள்ளே நடந்த விவரங்களை வெளியே கூறக்கூடாது என்கிற பிக்பாஸ் உத்தரவின் பெயரிலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
அவரை தாக்கிய அசி ராக்கி பிக்பாஸ் விதிகளின்படி அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதில் சிஜோ ஜான் யுடியூப் மூலமாக பிரபலமானவர். அசின் ராக்கி ஒரு டாட்டூ ஆர்ட்டிஸ்ட் ஆக சோசியல் மீடியா மூலமாக பரபலமானவர். முன்பெல்லாம் வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையிலும் ஓரளவு பிரபலமானவர்களே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரையில் வாய் வார்த்தை சண்டை மட்டும்தான் பிக் பாஸ் வீட்டில் நடந்தது. ஆனால் சமீப காலமாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என துடிக்கின்ற சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது அது இப்படி வன்முறையாக மாறும் அளவிற்கு நிகழ்ச்சி மாறிவிட்டது என நெட்டிசன்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.