தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். தற்போது அவர் பா.ஜ.க சார்பில் திருச்சூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார்.
கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள லூர்து மாதா தேவாலயத்தில் அன்னை மேரியின் சிலைக்கு தங்க கிரீடம் வழங்குவதாக சுரேஷ் கோபி அறிவித்து தனது மனைவி ராதிகா மற்றும் மகள் பாக்யாவுடன் சென்று தங்க கிரீடத்தை மாதா சிலைக்கு அணிவித்தார்.
தற்போது அது தங்க கிரீடம் இல்லை என்றும் செம்பு பூசப்பட்ட கிரீடம் என்றும் சர்ச்சை கிளம்பி உள்ளது. பொதுவாக தங்க கிரீடம், தங்க பதக்கம் என்பதெல்லாம் 100 சதவிகித தங்கத்தில் செய்யப்படுவதில்லை. தங்க முலாம் பூசப்பட்டே தயாரிப்பார்கள். இதனால் அந்த கிரீடம் தங்க முலாம் பூசப்பட்டதா? அல்லது தங்க வர்ணம் பூசப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த விஷயத்தை பூதாகரமாக்கி வருகிறது.