அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறிய பிறகு அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக குறைந்துவிட்டது. அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் பிரபாஸ் உடன் அவர் இணைந்து நடித்த சலார் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக அவர் கடந்த சில வருடங்களாகவே தனது கடும் உழைப்பை கொடுத்து நடித்துள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் ஒரு வழியாக வரும் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் சலார் படத்தில் நடித்த சமயத்திலேயே பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் இணைந்து படே மியான் சோட்டே மியான் என்கிற படத்தில் வில்லனாக நடித்து வந்தார் பிரித்விராஜ். தற்போது இந்த படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளதுடன் ஆடு ஜீவிதம் வெளியாகும் அதே ஏப்ரல் பத்தாம் தேதி தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் பிரித்விராஜின் மாறுபட்ட நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.