பிரியங்கா சோப்ராவின் 'தமிழன்' பட அனுபவம் பகிர்ந்த அம்மா | 'சப்தம்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு | யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் |
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் தாங்கள் அணிந்து வரும் உடைகள், ஆபரணங்கள் எல்லாமே உடனுக்குடன் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி என்னதான் விதவிதமான நிறங்களை கொண்ட ஆடைகளை அணிந்தாலும் காலில் அணியும் செப்பல் மற்றும் ஷூக்கள் மட்டும் இரண்டும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும் என்கிற வழக்கத்தை யாருமே மாற்றுவதில்லை.
இதிலும் ஒரு புதுமையை செய்ய வேண்டும் என நடிகை பார்வதி நினைத்தாரோ என்னவோ இரண்டு கால்களிலும் இரண்டு விதமான நிறம் கொண்ட ஷூக்களை அணிந்து கொண்டு அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு கலாட்டா செய்துள்ளார். ரசிகர்களும் அவரது கலாட்டாவை ரசித்து விதவிதமான கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.