ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை கதை ஏற்கனவே 'யாத்ரா' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. அவரது கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்து இருந்தார். ராஜசேகர ரெட்டி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆந்திரா முழுவதும் நடை பயணம் சென்றார். இதனை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் 'யாத்ரா 2' என்ற பெயரில் தயாராகிறது.
இந்த பாகத்தில் ராஜசேகர ரெட்டியின் மகனும், தற்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். இந்த படத்தில் சோனியா தொடர்பான காட்சிகளும் இடம் பெறுகின்றன. சோனியா வேடத்தில் ஜெர்மனி நடிகை சுஜானே பெர்னட் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளதோடு சோனியா தோற்றத்தில் இருக்கும் அவரது படத்தையும் வெளியிட்டு உள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் வீ.ராகவ் கூறும்போது, “ஜெகன் மோகன் ரெட்டி மக்கள் தலைவராக வளர்ந்ததையும், 2009 முதல் 2019 வரை ஆந்திராவில் நடந்த அரசியல் சம்பவங்களையும் யாத்ரா 2 படத்தில் காட்சிப்படுத்துகிறோம். ஜெகன் மோகன் ரெட்டி மீது சோனியா தனிப்பட்ட அன்பு வைத்திருந்தார். அது இந்த படத்தில் இடம்பெறுகிறது. இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும்” என்றார்.




