ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் |
அத்தடு, கலிஜா ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் த்ரி விக்ரம், நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'குண்டூர் காரம்'. ஸ்ரீ லீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிகா மற்றும் ஹசைன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 2024 பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது.
சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் குண்டூர் காரம் படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, " குண்டூர் காரம் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வருகின்ற தசரா பண்டிகை வெளியாகும்" என தெரிவித்தார்.