ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

கடந்த சில மாதங்களுக்கு முன் மம்முட்டி நடித்த ஆக்ஷன் படமான கிறிஸ்டோபர் மற்றும் ஆர்ட் படமான நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி.
ஆதிபுருஷ் படத்தில் அங்கதன் கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் மனோகர் பாண்டே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரான ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தற்போது இந்தப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கதை பிடித்துப்போனதால் மம்முட்டியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இதை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




