சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும்.. இந்தப்படத்தை பிரபல மலையாள கதாசிரியர் சச்சிதானந்தம் என்கின்ற சாச்சி இயக்கி இருந்தார். இந்தப்படம் வெளியான சில மாதங்களில் 49 வயதே ஆன சாச்சி திடீரென மரணமடைந்தார்.. அந்த சமயத்தில் அவர் அடுத்ததாக தனது கனவுப்படமாக எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய விலாயத் புத்தா என்கிற நாவலை சினிமாவுக்காக மாற்றும் வேலையை செய்து முடித்திருந்தார். ஆனாலும் அவரது கனவு நனவாகாமலேயே மரணத்தை தழுவினார்.
அதே சமயம் நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை எப்படியும் எடுத்தே தீருவது என முடிவு செய்து இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை ஜெயன் நம்பியார் என்கிற அறிமுக இயக்குநருக்கு வழங்கினார். இந்த ஜெயன் நம்பியார் ஏற்கனவே பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான 'லூசிபர்' படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.. அதுமட்டுமல்ல, சாச்சி இயக்கிய அனார்கலி மற்றும் அய்யப்பனும் கோஷியும் படங்களிலும் கூட முதன்மை இணை இயக்குனராக பணியாற்றியவர் தான்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் தொடங்கி அவ்வப்போது இடைவெளி விட்டுவிட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பிரித்விராஜ் ஒரு பக்கம் டைரக்சன் மற்றும் இன்னொரு பக்கம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக நடித்து வருவதால் இந்த படத்தின் மீதி படப்பிடிப்பு தாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் 50 நாட்கள் கொண்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் டபுள் மோகனன் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகிறார். இதுவும் சாச்சி கதை எழுதிய டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் படங்கள் போல ஈகோ பின்னணியில் உருவாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது.