இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
ராதே ஷ்யாம் படத்தின் தோல்விக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தருவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் ஓம் ராவத் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடித்துள்ளார். வரும் ஜூன் 16ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் இந்த படத்திற்கான முன்பதிவு துவங்கி விட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஆதரவற்ற குழந்தைகள் இந்த ஆதிபுருஷ் படத்தை பார்ப்பதற்காக மொத்தம் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் தனது சொந்த செலவில் வாங்கினார்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனும் நடிகருமான மஞ்சு மனோஜ் மற்றும் அவரது மனைவி பூமா மவுனிகா ரெட்டி இருவரும் இணைந்து இதேபோன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஆதிபுருஷ் படம் பார்க்க வைக்கும் விதமாக 2500 டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர். இது போன்ற பிரபலங்கள் ஆதிபுருஷ் படத்தை ஆதரவற்ற குழந்தைகள் பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி மொத்தமாக டிக்கெட் வாங்கி வருவது ஒரு பக்கம் பாராட்டுக்களை பெற்றாலும் இன்னொரு பக்கம் படத்திற்கான பப்ளிசிட்டிகளில் இதுவும் ஒன்று என்றும் சிலர் கூறி வருகின்றனர்.