இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான 2018 என்கிற படம் மலையாள ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மாறியது. இதற்கு முன் மோகன்லால் நடித்த புலிமுருகன், லூசிபர் ஆகிய படங்கள் செய்திருந்த வசூல் சாதனையை முறியடித்து தற்போது 200 கோடி என்கிற மாபெரும் வசூல் இலக்கை எட்டியுள்ளது. இந்த படம் வெளியாகி 33 நாட்கள் ஆனபோதும் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் குறையாத நிலையில் திடீரென ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது.
குறைந்தபட்சம் ஒரு படம் வெளியாகி 42 நாட்கள் கழித்து தான் ஓடிடிக்கு கொடுக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறையையும் இந்த படத்தின் தயாரிப்பாளர் மீறியுள்ளார். இதை கண்டித்து சமீபத்தில் கூட மலையாள விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தயாரிப்பாளரின் முடிவு குறித்தும் அதற்கு இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் ஒப்புக்கொண்டது குறித்தும் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் படத்தில் முக்கியமான ஹீரோவாக நடித்த டொவினோ தாமஸ்.
இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, “இது பற்றி எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை.. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதன்படி செய்யட்டும்.. கடந்த சில நாட்களாகவே இதுதான் போய்க் கொண்டிருக்கிறது” என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.