2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
தெலுங்கு நடிகர் அல்லு ரமேஷ்(52) மாரடைப்பால் காலமானார். சிருஜல்லு என்ற படத்தில் நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து மதுரா, வைன்ஸ், வீதி, நெப்போலியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். கடைசியாக அனுகோனி பிரயாணம் என்ற படத்தில் நடித்தார். குணச்சித்ர வேடங்களில் மட்டுமல்லாது, காமெடியாக அதிகம் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். விசாகப்பட்டிணத்தில் வசித்து வந்த இவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு, உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.