ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான அதே நாளில் கன்னடத்தில் வெளியான படம் தான் காந்தாரா. சிறிய படம் என்கிற அளவில் வெளியான இந்தப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார். படம் வெளியானபின் தென்னிந்தியா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கவனம் ஈர்த்த இந்த படத்தின் வெற்றி ரிஷப் ஷெட்டியை மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் இருந்து அவருக்கு நடிக்க அழைப்பு வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரிஷப் ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி. அதுமட்டுமல்ல அடுத்தது தான் நடிக்க இருப்பது கன்னட திரைப்படம் தான் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு காந்தாரா படத்தின் தயாரிப்பாளர், ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என கூறியிருந்தார். அதேசமயம் காந்தாரா 2 உடனடியாக துவங்கப்பட போவதில்லை என்றும் வேறு ஒரு கன்னட படத்தில் தான் ரிஷப் ஷெட்டி, நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.