ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாள திரையுலகில் ஹேப்பி வெட்டிங், ஒரு அடார் லவ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் ஒமர் லுலு. புருவ அழகி என்கிற பெயரில் பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை அறிமுகம் செய்தவர் இவர்தான். இந்த நிலையில் தற்போது இவர் நல்ல சமயம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷகிலா நடித்துள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 25ம் தேதி வெளியாவதை தொடர்ந்து இதன் புரமோசன் நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள ஹை லைட் என்கிற மாலில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் மால் நிர்வாகத்தினர் இந்த நிகழ்ச்சியில் ஷகிலாவின் வருகையை அனுமதிக்க முடியாது என மறுத்து விட்டனர். காரணம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிவின்பாலி நடித்த சாட்டர்டே நைட் என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி இதே மாலில் நடந்தபோது அந்த நிகழ்வில் கலந்துகொண்ட இரண்டு நடிகைகளிடம் ரசிகர்கள் என்கிற பெயரில் சிலர் அத்துமீறிய நிகழ்வு நடந்து அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஷகிலாவை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் அவர் இல்லாமல் நீங்கள் நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால் ஷகிலா இல்லாமல் இந்த விழாவை நடத்த விரும்பாத ஒமர் லுலு இந்த புரமோசன் நிகழ்ச்சியை கேன்சல் செய்துவிட்டார். அது மட்டுமல்ல ஷகிலாவுடன் இணைந்து இதுகுறித்து பேசி அவரிடம் வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ஒமர் லுலு.
இந்த வீடியோவில் ஷகிலா பேசும்போது, “இதுபோன்று பல நிகழ்வுகளை நான் கடந்தகாலத்தில் எதிர்கொண்டு உள்ளேன். நான் இந்த விழாவிற்காக கோழிக்கோடு வருகிறேன் என்கிற செய்தி வெளியானபோது பல வெறுப்பான கருத்துக்கள் மூலம் என்னை காயப்படுத்த ஆரம்பித்தனர். இந்த நிலைக்கு என்னை தள்ளியது நீங்கள் அனைவரும் தான். இன்னும் என்னை ஏன் அங்கீகரிக்க மறுக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.