ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. போட்டி நடைபெறுவதற்கு முன்பாக தனது ரசிகர் ஒருவருடன் இயக்குனர் ஒருவர் பந்தயம் வைத்து 5 லட்ச ரூபாய் தோற்ற சுவாரஸ்ய நிகழ்வும் நடந்துள்ளது. மலையாளத்தில் புருவ அழகி என அழைக்கப்படும் பிரியா பிரகாஷ் வாரியர் கதாநாயகியாக அறிமுகமான ஒரு அடார் லவ் படத்தை இயக்கியவர் இயக்குனர் ஒமர் லுலு. தற்போது இவர் நல்ல சமயம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். விரைவில் அது திரைக்கு வர இருக்கிறது.
ரசிகர்களுடன் எப்போதுமே சோசியல் மீடியாவில் உரையாடும் பழக்கம் கொண்டவர் ஒமர் லுலு. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து மோதுவதற்கு முன்னதாக சோசியல் மீடியாவில் ரசிகர் ஒருவர் இந்த போட்டியில் யார் ஜெயிப்பார் என பந்தயம் கட்ட முடியுமா என ஒமர் லுலுவுக்கு சவால் விடுத்துள்ளார். ரசிகர் இங்கிலாந்து ஜெயிக்கும் என்று பந்தயம் கட்ட, ஒமர் லுலு பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் என கூறியுள்ளார். பந்தயத்தொகையாக 5 லட்சம் ரூபாயை நிர்ணயம் செய்தார்கள்.
இந்தநிலையில் இங்கிலாந்து ஜெயித்துவிட சொன்னபடி அந்த இளைஞரை தனது இடத்திற்கே வரவழைத்தார் ஒமர் லுலு. அதுகுறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அந்த இளைஞரை சோசியல் மீடியமாக மூலமாக அறிமுகப்படுத்தியும் உள்ளார். இந்த 5 லட்சம் ரூபாயை நான் இவருக்கு தந்துவிட்டேனா இல்லையா, அவர் வாங்கிக் கொண்டாரா இல்லையா என்பது எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.. சாகும்வரை அந்த விஷயம் யாருக்கும் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வோம்” என்று கூற அதற்கு அந்த ரசிகரும் புன்னகையுடன் தலையசைத்துள்ளார்.