இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஆந்திராவின் குண்டூரில் உள்ள இப்டாம் எனும் கிராமத்தில் உள்ள சில வீடுகள் சாலை விரிவாகத்திற்காக இடிக்கப்பட்டது. இவர்கள் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேவா கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல பவன் கல்யாண் தொண்டர்கள் புடைசூழ சென்றார். அவர் சென்ற விதம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தனது காரில் அவர் மேற்கூரையில் அமர்ந்தபடி . சாவகாசமாக கால்களை நீட்டி உட்கார்ந்தபடி சென்று கொண்டிருந்தார். அவரது காரில் அவருடைய கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று கொண்டிருந்தனர். அவர்களும் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டே நின்றிருந்தனர். டிரோன் கேமரா பதிவு, வீடியோகிராபர், போட்டோகிராபர் புடைச் சூழ பவன் பயணித்திருக்கிறார்.
தெலுங்கு படத்தின் வில்லன்கள் பாணியில் அவர் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மீது சாலை விதிகளை மீறியது தொடர்பான வழக்கு தொடர ஆந்திர போலீசார் முடிவு செய்துள்ளனர்.