ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு |
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது தனது புதிய படமான ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே யாரோ சில மர்ம நபர்கள் பவன் கல்யாணை பின் தொடர்ந்து நோட்டம் பார்த்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜூபிலி ஹில்சில் உள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு வந்த இருவர் அவரது பாதுகாவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதையடுத்து ஐதராபாத் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பவன் கல்யாணின் வாகனத்தை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வருகிறார்களாம். அதன் காரணமாக இது குறித்து பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி சார்பில் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்கள். மேலும் ஆந்திர அரசுக்கு எதிராக விஜயவாடாவில் பவன் கல்யாண் ஆற்றிய உரை அங்குள்ள மீடியாக்களில் தலைப்பு செய்தியாக இடம் பிடித்துள்ளது. அதன் பிறகுதான் இதுபோன்று மர்ம நபர்கள் அவரைப் பின் தொடர்ந்து நோட்டமிடுவதாகவும் பவன் கல்யாண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.