ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
அங்கமாலி டைரீஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அன்னா ரேஷ்மா ராஜன். அதன்பிறகு வெளிபாடின்டெ புஸ்தகம், மதுர ராஜா, ஐயப்பனும் கோஷியும் உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். தனியார் செல்போன் நிறுவன ஊழியர்களால் அன்னா சிறை வைக்கப்பட்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
டூப்ளிகேட் சிம் வாங்குவதற்காக நேற்று கொச்சி ஆலுவா பகுதியில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சென்று உள்ளார் அன்னா. புதிய சிம் கார்டு வாங்குவது தொடர்பாக அங்கிருந்த ஒரு பெண் ஊழியருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே மற்ற ஊழியர்கள் சேர்ந்து நிறுவனத்தின் ஷட்டரை இழுத்து பூட்டி நடிகை அன்னாவை சிறை வைத்தனர். உடனே தன்னிடமிருந்த செல்போன் மூலம் நண்பர்களை அழைத்துள்ளார் அன்னா. நண்பர்கள் வந்து அவரை மீட்டுள்ளனர். இது தொடர்பாக அன்னா போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அன்னா புகாரை வாபஸ் பெற்றார்.